Header Ads

test

பல மணி நேரம் நீடித்த சிறுமி ஹிஷாலினியின் பிரேதப் பரிசோதனை.

 ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமாக உயிரிழந்த  டயகம சிறுமியின் இரண்டாவது பிரதேப்பரிசோதனை இன்று முடிவடைந்துள்ளள்ள நிலையில் குறித்த பிரதேபரிசோதனை ஒன்பது மணித்தியாலங்கள் நீடித்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மூன்று மருத்துவ நிபுணர்கள் மணித்தியாலம் பிரதேபரிசோதனையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில காயங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று சிடி ஸ்கான் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவநிபுணர்கள் புதிய அறிக்கையை தயாரிப்பதற்காக உடலின் பல பாகங்களின் மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து ஆய்வு அறிக்கைகள் கிடைதததும் மருத்துவகுழுவினர் தங்கள் முடிவை வெளியிடுவார்கள் அதுவரை உடல் போரதனை மருத்துவமனையிலேயே இருக்கும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.


No comments