Header Ads

test

கொவிட் தடுப்பூசி பெற்றவர் கொவிட் தொற்றால் மரணம் - இலங்கையில் சம்பவம்.

 சைனோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

73 வயதைச் சேர்ந்த ஒருவர், காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

இவர் மே 29ஆம் திகதி முதலாவது சைனோபார்ம் தடுப்பூசியையும், ஜுன் 28ஆம் திகதி இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை தொடர்ந்து கராப்பிடடி்ய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியிருப்பதாக கூறப்படுகிறது.


No comments