முல்லைத்தீவில் உயிரிழந்த கொவிட் தொற்றாளர்.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடை வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவினர்களால் இவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கு பி.சிஆர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியா எடுத்துச்செல்லப்படவுள்ளது.
மணற்குடியிருப்பில் இவர் வாழ்ந்த இடம் இவருடன் தொடர்பினை பேணியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
Post a Comment