குளிரூட்டியில் மாடு கடத்திய நபர் பளையில் பொலிஸாரால் கைது.
கிளிநொச்சியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற ஒருவர் பளை நகரப் பகுதியில் இன்று மாலை பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக 9 கால்நடைகளை குளிரூட்டி வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக பளை பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
அந்த இரகசிய தகவலையடுத்து பளை நகரப் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை பளை பொலிஸார் சோதனையிட்டபோது மாடுகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.
மேலும் கைதான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment