வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராட்பண நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், வவுனியா பல்கலைக்கழகமாக எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அங்குராட்பண நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
நேற்று வவுனியாவில் நடைபெற்ற வடக்கின் உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்குகொண்ட கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
11 ஆம் திகதி நடைபெறும் அங்குராட்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment