Header Ads

test

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக தமிழ்மாறன் கடமைகளை பொறுப்பேற்பு.


முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இரத்தினம் - தமிழ்மாறன், நேற்று (07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வு பெற்று சென்றதை அடுத்து, புதிய கல்விப் பணிப்பாளர் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு நியமிக்கப்படவில்லை.

முல்லை வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் கடந்த வாரத்திற்கு முன்னர் வமாகாண கல்விதிணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட போதும் அவர் தனது பதவியினை பொறுப்பேற்பதில் மூன்று மாதங்கள் காலக்கெடு கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னிலையில் வடமாகாண ஆளுனர் அவர்கள் உடனடியாக பதவியினை பொறுப்பேற்குமாறு பணித்ததற்கு அமைய இரத்தினம் - தமிழ்மாறன் அவர்கள் கடமைகளை நேற்று பொறுப்பேற்றுள்ளார்.


No comments