Header Ads

test

பழுதடைந்த வாகனங்களை மீள புதுப்பித்து காட்சிப்படுத்திய இராணுவம்.

 இராணுவ பதவி நிலை பிரதானியாக தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ். முன்னரங்கு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் படை அலகுகளின் சேவைகளுக்காக பழுதுபார்க்கப்பட்டு புதுபிக்கப்பட்ட வாகனங்களை கடந்த 18 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக கையளித்தார்.


அதன்படி, ஒரு சில கெப் ரக வாகனங்கள், டிரக் வண்டிகள், உழவு இயந்திரங்கள், பவுசர்கள், முச்சக்கர வண்டிகள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் நீர் பம்பிகள் உள்ளிட்டவைகள் உதிரிப்பாகங்கள், மற்றும் சில பகுதிகள் அற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து 4 வது இலங்கை இராணுவ இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு முறையாக கையளிக்கப்பட்டது.

புதிய நியமனத்தை பொறுப்பேற்பதற்காக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேர யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, பலதரப்பட்ட தேவைகளுக்கும் வாகனங்கள் அவசியப்படுவதை கருத்திற் கொண்டு பழைய வாகனங்களை முறையாக கையளித்திருந்தார்.

இந்நிகழ்வில் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படை தளபதி, 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவு தளபதிகள், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேட்களின் தளபதிகள், சிரேஸ்ட பணி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

No comments