Header Ads

test

துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் பலி.

 அம்பாறை - இங்கினியாகல பொலிஸ் பிரிவில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அம்பாறை - இங்கினியாகல நாமல்ஓயா பிரதேசத்தில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக நபர்கள் மூவர் நாமல்ஓயா - நாமல்தலாவ காட்டுப் பகுதிக்கு இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மூவரில் 27 வயதுடைய நரொருவர் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபர் இராணுவ சிப்பாய் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் 36 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் , தான் மான் ஒன்றினை துரத்திச் சென்று அதன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் , இதன் போதே தனது நண்பன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் கொலையா என்பது தொடர்பில் பொலிஸாரால் விசாரணகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


No comments