இலங்கைக்கு கிடைத்த அமெரிக்காவின் மொடேர்னா.
தக்க நேரத்தில் வழங்கப்பட்ட உதவியால் இலங்கையில் உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளதாக அமெரிக்காவின் இலங்கைக்கான கொரோனா தடுப்பூசி வழங்கலை பாராட்டியுள்ளார் யு.எஸ்.எயிட் நிர்வாகி சமந்தா பவர் .
இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது.
இலங்கையின் கொவிட் 19க்கு எதிரான நடவடிக்கைக்கு ஆரம்பம் முதல் யுஎஸ்எயிட் அவசரமருத்துவ விநியோகங்களையும் முக்கிய உதவிகளையும் வழங்கிவருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெருந்தொற்றினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு நாங்கள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் மேலும் 1.4 மில்லியன் உயிர்காக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment