Header Ads

test

பரிதாபகரமாக உயிரிழந்த நபர்.

 திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் (31.07.2021) இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்திலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் ஒருவர் மாத்திரம் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போது அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

மற்றவர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் (வயது - 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.     




No comments