அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவித்தல்.
சகல அரச ஊழியர்களையும் எதிர்வரும் 1ம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது மிக குறைந்தளவான பணியாளர்களே பணிக்கு அழைக்கப்படுவதால் நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அமைச்சு செயலர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக அரச நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment