Header Ads

test

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தளர்வு.

 மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.  

அதன்படி, முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments