யாழில் கொவிட் தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் நேற்று (29 உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த (79 வயது) பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த (80 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த (44 வயது) ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார். இதன்படி வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தில் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment