துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் படுகொலை.
ஊரகஸ்மங்ஹந்திய, தேவத்த சந்தியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (02) இரவு 10.15 மணியளவில் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் வைத்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.30 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment