Header Ads

test

சிறுமி ஹிசாலினி புதைக்கப்பட்ட பகுதிக்கு விசேட பாதுகாப்பு.

 ரிஷாட் பதியுதினின் வீட்டில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமியான ஹிஷாலினியின் சடலம், மேலதிக விசாரணை, பரிசோதனைக்காக இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் , ஹிஷாலினியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு டயகம பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து, மீள் பரிசோதனை நடத்துவதற்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments