Header Ads

test

கொவிட் தொற்று காரணமாக மேலும் பலர் உயிரிழப்பு.

 இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (06) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களுள் 21 ஆண்களும், 17 பெண்களும் அடங்குவதாக வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,351 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 268,111 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 238,131பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments