Header Ads

test

கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுமியின் துயரம்.

 வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 7 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி அயல் வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நீண்ட நேரமாகியும் சிறுமியை காணாதநிலையில் அயல் வீட்டார் தேடியுள்ளனர்.

இதன்போது அருகில்உள்ள கிணற்றில் சிறுமி விழுந்துள்ளமை கண்டறியப்பட்டது. சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது சிறுமியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


No comments