புகையிரத கடவையில் இடம்பெற்ற பாரிய விபத்து.
கனேமுல்ல புகையிரத கடவையில் டிப்பர் வாகனமும் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதுடன் மேலும் ஐந்து வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கனேமுல்ல போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (20) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி குறித்த புகையிரதம் பயணிக்கவிருந்த நிலையில், கடவத்தை திசையிலிருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் தண்டவாளத்துக்கும் கடவைக்கும் இடையில் சிக்கிக்கொணடுள்ளது.
இதன்போது குறித்த டிப்பர் வாகனம் புகையிரதத்தில் மோதுண்டு சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த நான்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்துவதற்கு முயற்சித்த போதும் தடை இயங்காததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக அதன் சாரதி வாக்குமூலமளித்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment