Header Ads

test

கிளிநொச்சி மாவட்ட சுற்றுலாதுறை சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

இன்று கிளிநொச்சி கருணா நிலைய கேட்போர் கூடத்தில் "மக்கள் சிந்தனைக் களம்"  அமைப்பின் மாதாந்த ஒன்று கூடலில் வடமாகாணம் தொடர்பான, குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் சார்ந்த பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுலா துறை சார்ந்த விடயம் தொடர்பில் வண.ரீ.எஸ்.யோசுவா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் துறை சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலா தளங்களை அடையாளப்படுத்துவதுடன் மட்டுமல்லாது விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்பு போன்றவற்றின் ஊடாக கிராமங்களில் எவ்வாறு சுற்றுலா நிலையங்களை விரிவுபடுத்தி அதனூடாக பொருளாதாரத்தை  விரிவடையச் செய்து வறுமையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

வேலை வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இயற்கையுடன் மனிதன் இணைந்து வாழ வேண்டியதன் தேவை தொடர்பிலும் ஆராயப்பட்டது.

குறித்த கலைந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக அடுத்து வரும் மாதத்தின் ஆரம்ப நாளில் கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது சுற்றுலா துறை மையத்தை பிரகடனப்படுத்துவதோடு அது தொடர்பான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிப்பது தொடர்பிலும் முடிவெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி, எழுத்தாளர் கருணாகரன் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழ்நாதம் தொலைக்காட்சியின் முகாமைத்துவ பணிப்பாளர்  வவுனியூர் ரஜீவன் மற்றும் வைத்தியர் சகாஜமேரி,  தயாளன் என பலரும் கலந்துகொண்டனர்.









1 comment: