கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை.
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் வெளிநாட்டு பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று நண்பகல் குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment