Header Ads

test

கிளிநொச்சி பன்னங்கண்டியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments