வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்.
வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணிகள் இன்று (07) முதல் இடம்பெறவுள்ளன.
இதன்படி, வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (07) முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், தாண்டிக்குளம், சோயா லேன், ஏ9 வீதி உள்ளிட்ட வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி மற்றும் வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.
Post a Comment