Header Ads

test

வீட்டு வாசலில் 20 பாம்பு குட்டிகள் - சிறுவனை தீண்டியுள்ளது.

 கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் வீட்டு வாசலில் இருந்து 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று சிறுவனை தீண்டியுள்ளது. இதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 20 பாம்பு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் உடனடியாக ராகம பொலிஸாரருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று ராமக பொலிஸார், பாம்பு மற்றும் அதன் குட்டிகளை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


No comments