Header Ads

test

நேற்றைய தினத்தில் மாத்திரம் வீதி விபத்தில் 10 பேர் மரணம்.

 நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 6 பேர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், மூன்று பாதசாரிகளும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அதிகளவில் உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளின் விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

எனவே, சாரதிகள் வீதியில் பயணிக்கும் போது, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments