Header Ads

test

பூநகரிகயையும் விட்டுவைக்காத சீனர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை கடற்பகுதியில் சீனர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டுபுதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை பண்ணை ஒன்றில் சீனர்கள் பலர் நிரந்தரமாக தங்கி நின்று பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ள போதிலும் பூநகரி பிரதேச செலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினதோ அனுமதி எதுவும் பெற்ப்படவில்லை.

எனினும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி யாழ்ப்பாணத்தவர்கள் மூவரின் பெயரில் வழங்கப்பட்டுள்ள போதிலும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments