Header Ads

test

ஸ்ரீலங்காவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்.

 ஸ்ரீலங்காவுக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த 'எம்எஸ்சி மெஸ்சினா' என்ற கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments