மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம்.
மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை தாதியர் சங்கம்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வைத்தியசாலைகளில் தொடர்ந்து கடமையில் ஈடுப்பட்டுவரும் தாதியர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு இடைக்கால கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக தலையீடு செய்து தமது கோரிக்கைளை நிறைவேற்றாவிடில் அடுத்த வாரம் நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் எச்.எம்.எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.
Post a Comment