வெலிகடை கைதிகளின் போராட்டம் நிறைவு.
வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை ஊடக பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளனர்.
வெலிகடை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
அதற்கு ஆதரவு தெரிவித்து பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்றுஉண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையான மாற்றுமாறு கோரி அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment