மீன் பிடிக்க தடை விதித்துள்ள கடற்றொழில் திணைக்களம்.
கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதிகளில் ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதால் பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீன்பிடி சமூகத்துக்கு கடற்றொழில் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இந்திய கப்பல் ஒன்று மேற்கொண்ட ஆய்வுகளில் இருந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட கடற்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக குறித்த இந்திய கப்பல் கடந்த 25ம் திகதி இலங்கை வந்தது.
26ம் திகதியில் இருந்து இந்த கப்பல் தனது பணிகளை ஆரம்பித்து 2ஆம் திகதி வரையில் இந்த ஆய்வுகள் இடம்பெறும். இதனால் இந்த நாட்களில் குறித்த கடற் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment