Header Ads

test

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

 டெல்டா மாறுபாடினை சாதாரணமாக கருத முடியாதென பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு செயற்பாட்டினை உரிய முறையில் மக்கள் பின்பற்றவில்லை என்றால் இலங்கையில் வேகமாக பரவ கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

அத்தோடு டெல்டா மாறுபாடு தொற்றிய ஒரு நோயாளி இருந்தாலும், மாறுபாடு தொடர்பான மேலதிக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த பரவல் கண்ணுக்கு தெரியாத ஒன்று என்ற போதிலும் நூற்றுக்கு 200 வீதம் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


No comments