Header Ads

test

தமிழ்நாதம் தொலைக்காட்சியின் மனிதநேய சமூக சேவை.

நேற்றைய தினம் தமிழ்நாதம் தொலைக்காட்சி மற்றும் நிஷாந்தன் கலைக்கூடம் இணைந்து புலம்பெயர்தேசத்தின் கொலண்ட் நாட்டை சேர்ந்த யோகேஸ்வரன் கந்தையா அவர்களின் நிதியீட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் கிராமத்திலுள்ள பொருளாதார நலிவுற்ற  பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிவாரண பணி முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில் வாய்ப்பினையிழந்த நிலையில்  பொருளாதார நலிவுற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான ஒரு மாத காலத்திற்கான உலருணவு வழங்கப்பட்டதுடன் கொவிட் விழிப்புணர்வு துண்டுப்பிரசுமும் வழங்கப்பட்டது.

குறித்த மனிதநேய சமூகப் பணிக்கான நிதியினை வழங்கிய கொலண்ட் நாட்டை சேர்ந்த யோகேஸ்வரன் கந்தையா குடும்பத்தினருக்கு அப் பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாதம் தொலைக்காட்சி மற்றும் நிஷாந்தன் கலைக்கூடத்தின்  தொடர்ச்சியான மனிதநேய செயற்பாடுகள் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
























No comments