புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் அதிரடி.
புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை ரத்து செய்துள்ளார்.
மூத்த துணை மன்றாடியார் நாயகம் செத்திய குணசேகர வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பதவி நிலை ரத்து, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதன்படி சட்டமா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள்.
முன்னைய சட்டமா அதிபர் டப்புலா டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்னே செயற்பட்டார். டப்புலா டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்னே, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளில் இருந்து விலகிக்கொண்டார்.
Post a Comment