திருகோணமலையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய சுறா.
திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் அரிய வகை சுறா மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கல்லராவ மீன் பிடிகிராமத்தில் வசித்து வந்தவர்கள் கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது, குறித்த வகை மீனானது பல தடவைகள் அவர்களது வலையில் சிக்குண்டதுண்டு. அதனை குறித்த மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்த சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், குறித்த மீனானது இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளது.
தெற்குக் கரையில் பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிவருகின்ற இக் காலப்பகுதியில், திருகோணமலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சுறா மீனானது குறித்த மீன் இன குடும்பத்தின் மிகப்பெரிய இனமாகும். சுமார் 9000 கிலோ எடையும், 9மீற்றர் நீளமும் கொண்ட மீனானது பொதுவாக ஆழ் கடலில் வசிப்பவை என்று கருதப்படுகிறது.
அவை பொதுவாக 70-100 ஆண்டுகள் வாழும் ஒரு வகை சுறா இனம் எனவும் தெரிவிக்கப்படும் இந் நிலையில், உலகில் அருகிவரும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் குறித்த சுறா மீனும் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இலங்கையில் அதனை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment