யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
அத்துடன், யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 945ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்று யாழ். மாவட்டத்தில் 33 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment