Header Ads

test

துமிந்த விடுதலை - ஸ்ரீலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை அலுவலகம் எச்சரிக்கை.

கொலைக்குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

“சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் பா.உ துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்தமை தன்னிச்சையான செயற்பாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

இந்த செயற்பாடு சட்டத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் பொறுப்புக்கூறலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் டுவிட்டரில் எச்சரித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவும் ஜனாதிபதியின் இந்த செயலுக்கு கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments