Header Ads

test

சிறைக்கூடத்தில் உயிரிழந்த இளைஞர் - மரணத்துக்கான காரணம் வெளியானது.

மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

25 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு, இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவில் விழுங்கியமையே அவரது உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


No comments