நாட்டில் மேலும் பலருக்கு கொவிட் தொற்று.
நாட்டில் நேற்று 1,825 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 1,801 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 24 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 251,751 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 32,049 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2,172 பேர் நேற்று குணமடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 216,840 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 43 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment