கனடாவில் பற்றி எரிந்த தேவாலயங்கள்.
மேற்கு கனடாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்றி நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிள்ளனர்.
Post a Comment