Header Ads

test

இணையத்தில் விற்பனைக்கு வந்த ஆடை - வெடித்தது சர்ச்சை.

 இந்துக்கள் மனம் புண்படும் விதமாக சிவலிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை இணையத்தில் விற்பனை செய்ய விளம்பரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

இணையத்தள ஆடை விற்பனை நிறுவனமொன்று ராவணா என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள மேலாடையில் சிவலிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆடை தொடர்பான சில நிறுவனங்கள் சர்ச்சையில் சிக்கி பரவலாக அறியப்பட்டதை தொடர்ந்து, விளம்பர உத்தியாக இந்த ஆடைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

எனினும், குறித்த ஆடை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.       




No comments