Header Ads

test

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புக்கான செயலணி இன்று (25) கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் விதத்திலேயே, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments