Header Ads

test

நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னதாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

     அதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர,  இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட, கலவான மற்றும் எஹெலியகொட, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட பிரதேசங்களுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments