Header Ads

test

லண்டனில் நடைபெற்ற தியாகிகள் தினம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்EPRLF) ஸ்தாபகர் தோழர் பத்மநாபா மற்றும் பன்னிரு தோழர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான யூன் 19ம் திகதியை உலகெங்கும் வாழும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவ்வருடம்  31வது தியாகிகள் தினமான யூன் 19ம் திகதி சனிக்கிழமை மெய்நிகர் வழியாக தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது.

இதனை தொடர்ந்து லண்டன்  உள்ள அக்ஸ்பிரிஞ்சில் கொரோன விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட தோழர்களுடன் 20.06.21 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 18.30 மணிக்கு  தியாகிகள் தினம் தோழர் திவான் அவர்களின் தலமையில்  நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் லண்டன் வாழ் தமிழீழ விடுதலை இயக்க (TELO) தோழர்கள், தமிழீழ மக்கள் விடுதலை கழக (PLOTE) தோழர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(EPRLF) தோழர்கள் மற்றும் ஈழத்து உறவுகளும் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வானது அஞ்சலி விளக்கேற்றுதலுடன்  தியாகிகளுக்கு மலர் தூவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் திவானின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து,  

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் ZOOM மெய்நிகர் வழியாக அஞ்சலி உரை ஆற்றியிருந்தனர் பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) பிரித்தானிய கிளை தலைவர் தோழர் சம்பந்தனின்(சாம்) அஞ்சலி உரையும்,தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) தோழர் Dr. சுரேஷ் இன் அஞ்சலி உரையும் இடம் பெற்றது.  

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் சஜீயின் 'மாண்டவர் மீண்டார்' என்ற தலைப்பில் கருத்தோவியமும்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் யோகேஷ் இன் கவிதை நிகழ்வும் zoom (மெய்நிகர்) ஊடாகவும் இடம்பெற்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாற்றுக் காணொளியும் காண்பிக்கப்பட்டது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் லண்டன் பொறுப்பாளர் தோழர் பிரபு, அவர்களின் நன்றி உரையுடன் அஞ்சலி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.








No comments