Header Ads

test

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை -இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண.

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சமையல் எரிவாயு விலைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, உரிய தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments