Header Ads

test

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - நிராகரிக்கும் இலங்கை கடற்படை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இலங்கை கடற்படை இன்று பகல் அறிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கப்டன் இந்திக்க டி சில்வா இதனை உறுதிசெய்தார்.

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் உயிர் தப்பி கரை வந்து சேர்ந்தனர் என்றும் தமிழக ஊடகங்களில் இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன.

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்தது மற்றும் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பெரும் பதட்டத்தை இலங்கை கடற்படை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் அப்படியொரு சம்பவமே இடம்பெறவில்லை என்று இலங்கை கடற்படைப் பேச்சாளர் கூறினார். எனினும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுகின்ற வெளிநாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை நிச்சயம் கைது செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


No comments