Header Ads

test

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன் உள்ளிட்ட மூவர் நாட்டை விட்டு வெளியேற தடை.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் கெப்டன், கப்பலின் பிரதம பொறியியலாளர் மற்றும் பிரதி பிரதம பொறியியலாளர் ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் கப்பலின் தலைவரிடம் நேற்று (31) 14 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 கப்பலின் கெப்டன், பிரதான பொறியியலாளர், உதவி பிரதான பொறியியலாளர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெள்ளவத்தையில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


No comments