வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலிருந்து மீட்க்கப்பட்ட பொருட்களால் பரபரப்பு.
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிலிருந்து, சிறைச்சாலைக்குள் கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று இன்றைய தினம் அங்கு கடமையிலிருந்த அதிகாரியொருவரால் மீட்கடப்பட்டுள்ளது.
இந்த பொதியானது, பெண்கள் பிரிவிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலைய கட்டடத்துக்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் மறைந்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த பொதியிலிருந்து 10 கைப்பேசிகள், அதற்கான 14 பற்றரிகள், 11 சிம் அட்டைகள், மின்னேற்றிகள் மற்றும் மருந்து பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் பொரளை காவல் நிலையத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment