Header Ads

test

இலங்கைக்கு 715 மில்லியனை வழங்க பேர்ள் கப்பல் நிறுவனம் இணக்கம்.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் இலங்கையின் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான நஷ்டஈட்டு தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான இடைக்கால நஷ்ட ஈடாக 715 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு குறித்த கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் நாட்டின் கடற்பரப்பு , கடல்வாழ் உயிரினங்கள் , மீன்பிடித்துறை என்பன பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments