ஐந்து ஆண்டுகள் சிறை! 50,000 ரூபாய் அபராதம் - விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை.
போலி கடிதங்களைக் காட்டி கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளுக்கு வருபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு ரூ 50,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக செய்தித்தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 31 ஆம் திகதி கொழும்பு நகருக்குள் போலி கடிதங்களைப் பயன்படுத்தி ஏராளமானோர் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment