இலங்கையில் மேலும் 43 கொவிட் மரணங்கள் பதிவு.
இலங்கையில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் (25) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.
18 பெண்களும், 25 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment