யாழில் கடந்த 2 நாட்களில் 6 பேர் கொரோனாவால் மரணம்.
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது.
அதன்படி யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர் ஒருவரும், யாழ்.நயீனாதீவை சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில் நேற்றய தினம் 2 பேர் மரணித்திருக்கின்றனர். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்மை குறிப்பிடத்தக்கது.
Post a Comment